*35 காயத்ரி மந்திரங்கள்!* : 

_ *ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்*_

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

*1. வினாயகர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.

*2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

*3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

*ரத  சப்தமி* 
#########
 24.01.2018
 புதன்கிழமை

 ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக்   கொண்டி ருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ''பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்க, '' இரு கொண்டுவருகிறேன்''  என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து  கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .   

''ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்''  என கோபித்து சாபமிட்டான்.