அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம்

Submitted by bharanikumariyer on Thu, 01/13/2022 - 09:03

இந்த நான்கு யோகங்கள் எப்போது வரும் என்பதை பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அஸ்வினி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர் பூசம், பூசம் ஆயில்யம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, பூராடம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால் அவை இருக்கும் காலம் சித்த யோகம் என்று அழைக்கப்படுகிறது.
அதே ஞாயிற்றுக்கிழமைகளில் உத்திரம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால் அது அமிர்தயோகம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மகம், விசாகம், அனுஷம், கேட்டை, அவிட்டம் ஆகிய நட்சத்தரகள் இருந்தால் அவை மரணயோகம்.
ஞாயிற்றுக்கிழமை பரணி நட்சத்திரம் இருந்தால் அது பிரபலாரிஷ்ட யோகம் ஆகும்

 

என்னென்ன செய்யலாம்?

சித்தயோகம்- சித்தி என்றால் வெற்றி. எனவே ஒரு காரியத்தில் வெற்றியை பெய இந்த காலத்தில் தொடங்கலாம். சித்தயோக நாட்களில் தொடங்கினால், அந்த காரியம் எந்தத் தடையும் இல்லாமல் இனிதே முடியும். வீடு வாங்க, தொரில் ஆரம்பிக்க, விவசாய பணி மேற்கொள்ள, புதிய வேலைக்கு முயற்சி மேற்கொள்ள, ஒப்பந்தங்கள் கையெழுத்திட, பாதியில் நின்று போன பணியை தொடங்க, திருமணம் செய்ய, திருமணப் பேச்சுவார்த்தை தொடங்க என சுப காரிங்களுக்கு இந்த நாளை பயன்படுத்தலாம்.

அமிர்தயோகம்- அமிர்தத்தை உண்டால் அழிவு இல்லாமல் வாழலாம். எனவே இந்த நாளில் தொடங்கும் எந்தவொரு நல்ல செயலும் நீண்ட காலத்திற்கு தலைமுறைகளை தாண்டி நிலைத்து நிற்கும்.
இந்த அமிர்த யோக நாட்களில் செய்யப்படும் சுப காரியங்களான திருமணம், வளைகாப்பு,சீமந்தம் முதலானவை நல்ல வாரிசுகளைத் தரும். சந்ததியினர், எந்தக் குறையுமின்றி வளருவார்கள். சந்ததியும் வாழையடிவாழையென செழிக்கும்.
நாள்பட்ட நோய்கள் குணமாக, இந்த அமிர்த யோக நாட்களில் மருந்து சாப்பிட்டால் நோய் விரைவில் நீங்கும்.
புதிய வீடு கட்டினாலும், வாங்கினாலும் தலைமுறைகளாக நீடித்து நிலைத்து இருக்கும்.
பொதுவாக அனைத்து சுப காரியங்களும் சித்த மற்றும் அமிர்த யோகம் வரும் நாட்களில் செய்யலாம்.

மரண யோகம் நாளில் எந்த சுப காரியங்களையும் செய்யக்கூடாது.
மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். மீண்டும் கடன் வாங்க நேரிடாது.
அதேபோல இனி அந்த காரியம் முடிவுக்கு வரவேண்டும் என்று நினைக்கும் செயல்களை, மரண யோகம் காலத்தில் செய்யலாம்.

பிரபாலாரிஷ்ட யோகம்- பாலா என்பது குழந்தை என்று பொருள். அரிஷ்டம் என்றால் அரித்தல் அதாவது தேய்தல் என பொருள்படும்.
இந்த பாலாரிஷ்ட நாட்களில் பிறக்கும் குழந்தை ஆரோக்கியக் குறைபாட்டுடன், தினம்தினம் ஏதாவது நோயுடன் இருக்கும். ஆதாவது அந்தக் குழந்தையின் 12 வயது வரை மட்டுமே இந்த பிரச்சினைகள் இருக்கும். அதன் பிறகு தானாகவே இந்த தோஷம் நீங்கிவிடும்.

திங்கட்கிழமைகளில் அஸ்வினி, பரணி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், ஆயில்யம், பூரம், உத்திரம் அஸ்தம், அனுசம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் சித்தயோகம்,
திங்கட்கிழமைகளில் ரோகிணி, புனர்பூசம், சுவாதி, திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அமிர்தயோகம்.
திங்கட்கிழமைகளில் கிருத்திகை, மகம், விசாகம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் மரணயோகம்.
திங்கட்கிழமை சித்திரை நட்சத்திரம் வந்தால் பிரபலாரிஷ்டயோகம்.
செவ்வாய்க்கிழமை அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், அவிட்டம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் சித்தயோகம்
செவ்வாய்க்கிழமை ரோகிணி, உத்திரம், மூலம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அமிர்த யோகம்.
செவ்வாய்க்கிழமை திருவாதிரை, விசாகம், கேட்டை, சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் மரணயோகம்.
செவ்வாய்க்கிழமை உத்திராடம் நட்சத்திரம் வந்தால் அது பிரபலாரிஷ்டயோகம்
புதன்கிழமைகளில் பரணி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் சித்தயோகம்
புதன்கிழமை கிருத்திகை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அமிர்த யோகம்.
புதன்கிழமை அஸ்வினி, அஸ்தம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மரணயோகம்.
புதன்கிழமை அவிட்டம், நட்சத்திரம் வந்தால் அது பிரபலாரிஷ்டயோகம்

வியாழக்கிழமைகளில் பரணி, பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், சித்திரை, விசாகம், அனுஷம், மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அது சித்தயோகம்.
வியாழக்கிழமை அஸ்வினி, புனர்பூசம், மகம், சுவாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அமிர்தயோகம்.
வியாழக்கிழமை கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, உத்திரம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் மரணயோகம்.
வியாழக்கிழமை கேட்டை நட்சத்திரம் வந்தால் அது பிரபலாரிஷ்டயோகம்

வெள்ளிக்கிழமை பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், உத்திராடம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் சித்தயோகம்.
வெள்ளிக்கிழமை அஸ்வினி, அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அமிர்தயோகம்.
வெள்ளிக்கிழமை ரோகிணி, பூசம், ஆயில்யம், மகம், கேட்டை, திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் மரணயோகம்
வெள்ளிக்கிழமை பூராடம் நட்சத்திரம் வந்தால் பிரபலாரிஷ்டயோகம்.

சனிக்கிழமை அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், பூரம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் சித்தயோகம்
சனிக்கிழமை ரோகிணி, மகம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள் அமிர்தயோகம்.
சனிக்கிழமை ஆயில்யம், உத்திரம், அஸ்தம், சித்திரை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மரணயோகம்
சனிக்கிழமை பிரபலாரிஷ்டயோகம் ரேவதி நட்சத்திரம