ஸ்ரீ வரலக்ஷ்மி விரத பூஜை

காலம்  : ஸ்ராவணம் ( ஆடி அல்லது ஆவணி ) மாதம் பௌர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று சுமங்கலிகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வரலக்ஷ்மி பூஜை செய்யவேண்டும் 

 1. ஆசமனம்
  1. கேசவயஸ் ஸ்வாஹா 
  2. நாராயணாயஸ் ஸ்வாஹா 
  3. மாதவாயஸ் ஸ்வாஹா
  4. கோவிந்தாய நமஹ 
 2.  விநாயகர் பிரார்த்தனை 
  1. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
 3. சங்கல்பம்
  1.  மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே|
 4. பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜை
  1.  பிள்ளையாருக்கு உபசார பூஜை :
   1.  உபசார பூஜை என்றால் பிள்ளையாருக்கு  தண்ணீர் தெளித்தல் ( மா இலை உபயோகிக்கவும்  ) சந்தனம் தெளித்தல் (புஷ்பம் உபயோகிக்கவும்)  குங்குமம் வைத்து  அக்ஷதையை பிள்ளையார்மேலே ஸமர்ப்பிக்கவும்
  2. புஷ்ப அக்ஷதைகளாலே மஞ்சள் பிள்ளையாரை  கீழ்கண்ட மந்திரங்களால் புஷ்பத்தைக் கொண்டு அர்ச்;சனை செய்ய வேண்டும். 
  3. ஓம் ஸூமுகாய     நமஹ , ஓம் ஏகதந்தாய     நமஹ  ஓம் கபிலாய         நமஹ........  ஓம் நாநாவித பத்ர பரிமள புஷ்பாணி ஸமர்ப்பியாமி
  4. ஊதுபத்தி காட்ட வேண்டும்
  5. வெத்திலை, பாக்கு, வாழைப்பழம்,வெல்லம், தேங்காய் இவைகளை நிவேதனம் செய்ய வேண்டும். மணி அடித்துக் கொண்டே கீழ் வரும் நிவேதன மந்த்ரங்களைச் சொல்ல வேண்டும்.
  6. கற்பூரம் காட்டவும்
  7. வக்ர துண்ட மஹாகாய கோடி சூர்ய சமப்ரப  நிர்விக்ணம் குருமே தேவ சர்வகார்யேஷுசர்வதா| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி 
  8. கலசத்திற்கு உபசார பூஜை  
   1. உபசார பூஜை என்றால்  கலசத்திற்கு தண்ணீர் தெளித்தல் ( மா இலை உபயோகிக்கவும்  ) சந்தனம் தெளித்தல் (புஷ்பம் உபயோகிக்கவும்)  குங்குமம் வைத்து  அக்ஷதையை பிள்ளையார்மேலே ஸமர்ப்பிக்கவும்
  9. லட்சுமி அஷ்டோத்திரம்
  10. தோரக்ரிந்திம் பூஜை 
  11.  வரலட்சுமி நோன்பு கதை

கதை சொல்பவரும் கேட்பவரும் பூ அட்சதை கையில் வைத்துக் கொள்ளவும். 

 நைமிசாரண்ய க்ஷேத்திரத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் . சௌனகாதி மஹாரிஷிகளைப் பார்த்து , குதமஹா முனிவர் சொல்லுகிறார் . ஓ முனி சிரேஷ்டர்களே ! ஸ்திரீகளுக்கு சர்வ சௌபாக்கியத்தைக் கொடுக்கும்படியான உத்தம விரதம் ஒன்றுண்டு . அதை பரமேஸ்வரன் பார்வதிக்கு சொன்னார் . நான் உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள் " என்று கூறினார் . கைலாச பர்வதத்தில் வஜ்ஜிர . வைடுர்யமான மணி கணங்களால் இழைக்கப்பட்ட சிங்காசனத்தில் வீற்றிருந்த பரமேஸ்வரனை பார்வதி தேவிநமஸ்கரித்து.
 
 
 " ஓதேவா ! ஸ்திரீகள் எந்த விரதத்தை செய்தால் , எப்படி செய்தால் புத்திர , பௌத்திராதி , சகல சம்பத்துண்டாகி , சுகம் அடைவார்களோ , அந்த விரதத்தைக் கூறுங்கள்"  என்று கேட்டார் .

அதற்கு பரமேஸ்வரன் " ஓ பார்வதியே ! வரலஷ்மி விரதம்" என்று ஒரு விரதமுண்டு , அந்த விரதம் ஆவணி மாதம் பூர்வபக்ஷம் அல்லது சுக்கில பக்ஷம் பருவத்திற்கு முன்ளே வரும் வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும் . ' என்றார் .

 ஓ காத்யாயினி ! இந்த வரலஷ்மி விரதத்தை விபரமாய் சொல்கின்றேன் . கேள் என்றார் . மகத தேசத்தில் குண்டினபுரமென்று ஓர் பட்டமுண்டு அப்பட்டணமானது பொன்மயமான கோபுரங்களாலும் , மெத்தை மேடையனாலும் , மதில்களாலும் மின் அலங்காரமாய்  இருந்தது . அப்பட்டணத்தில் சாருமதி என்னும் பெயர் கொண்ட ஒரு பிராமண ஸ்திரீ இருந்தாள் . அப்பெண்மணி மிகபதிவிரதை.கணவனையே தெய்வமாக நினைத்து , உதய காலத்தில் எழுந்து கணவனையே நமஸ்கரித்து பாதம் பணிந்து , பிரதட்சணம் செய்து , பின் கடவுளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து மாமனார் மாமியாருக்குத் தகுந்த பணிவிடைகள் செய்து விட்டு , வீட்டு வேலைகள் செய்யத்துவங்குவாள் . பெரியோர்களிடத்தில் பக்தியுடனும் , பணிவுடனும் நடந்து கொள்வாள் . இப்படி கற்புடன் இருந்த சாருமதி மேல் மகாலக்ஷ்மிக்கு மிக கருணை உண்டாகி , ஒரு நாள் இரவு சாருமதியின் கனவில் வரலக்ஷ்மி தோன்றி - சாருமதி ! உன்னிடத்தில் எனக்கு கிருபை உண்டாகி உனக்கு அனுக்ரஹிக்க பிரத்யக்ஷமானேன் . ஆவணிமாதம் பூர்வ பக்ஷம் பருவத்திற்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் என்னை பூஜித்தால் உன் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்கிறேன் என்று சொல்ல உடனே சாருமதி தன் கனவிலேயே லக்ஷ்மி தேவியை வலம் வந்து நமஸ்கரித்து அபான ஸ்தோத்திரம் செய்தாள் . 


சுலோகம் :
 

நமஸ்தே சர்வலோகநாம் ஜனன்யை புண்ணிய மூர்த்தியே சரண்யே த்ரிஜகத்வந்தியே விஷ்ணு வக்ஷஸ்தாலேயே!


 
 என்று அநேக விதமாய் ஸ்தோத்திரம் செய்து , உங்களுடைய கடாக்ஷத்தினால் மக்களுக்கு சகல சம்பத்துக்களும்  வித்தைகளும் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை. என்னுடைய பூர்வ புண்ணியத்தால் உங்களுடைய தரிசனம் கிடைக்கப் பெற்றேன் . என்று மிக சந்தோஷத்துடன் சாருமதி  கூறினாள் . மஹாலஷ்மி மிகவும் சந்தோஷமுண்டாகி சாருமதி உடனே கண்விழித்து வீட்டின் நான்கு புறமும் சுற்றி பார்த்து வரலக்ஷ்மி தேவியைக் காணாமல் "ஓஹோ , நான் கனவு கண்டேன் " என்று அறிந்து , பார்த்த  சொப்பனத்தை கணவர் , மாமி , மாமனார் மற்றும் எல்லோரிடமும் சொன்னாள் . இந்த கனவு மிக உத்தமமானது என்று சொல்லி ஆவணி மாதம் வந்தவுடன் மஹாலஷ்மி சொன்ன நாளில் சாருமதி வீட்டில் எல்லோரும் வீட்டை மெழுகி சுத்தப்படுத்தி காலையில் இருந்து மாலை வரை ஓர் ஆசனம் போட்டு , அவ்விடத்தில் கோலங்கள் இட்டு , ஒர் தேங்காயுடன் கலசம் அலங்கரித்து , வரலக்ஷ்மி தேவியை அந்த கலசத்தில் ஆவாஹனம் செய்து , பக்தியுடனும் பணிவுடனும் சாயங்காலத்தில் எல்லா ஸ்திரீகளும் அந்த வரலஷ்மி தேவியை தியானித்துச்சொல்லுகிறார்கள் . 

என்று கூறி மற்றும் ஷோடசோபசார பூஜைகள் செய்து , ஒன்பது இழைகளும் முடிகளும் உள்ள நோன்பு கயிறு என்னும் தோரத்தை வலது கையில் கட்டிக் கொண்டு , வரலக்ஷ்மி தேவிக்கு பலவிதமான பலகார தினுசுகள் நிவேதனம் செய்து , கற்பூர தீபராதனை செய்து ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தார்கள் .


ஒரு தரம் வலம் சுற்றி வந்தவுடனே அந்த ஸ்திரீகளுடைய கால்களில் கல்கல்லென்று ஓசை உண்டாகியது . எல்லோரும் தங்கள் கால்களைப் பார்த்துக் கொள்ள கெஜ்ஜை முதலிய ஆபரணங்கள் உண்டாயிருக்கக்கண்டு சந்தோஷம் அடைந்தார்கள் . 

இரண்டாவது பிரதக்ஷிணம் செய்ய அவருடைய கைகளில் தளதள வென்று பிரகாசிக்கும் படியான நவரத்தின வளையல்கள் , கங்கணம் மற்றும் ஆபரணங்கள் ஜொலித்தன .


மூன்றாவது பிரதக்ஷிணம் செய்ய , அந்த ஸ்திரீகளுடைய சரீரம் முழுவதும் ஆபரணங்களால் நிறைந்தது . அவர்கள் வீடுகளில் எல்லாம் செல்வம் கொழித்து , ரத , கஜ . துரக , பதாதி , வாகனங்களுடன் அந்த ஸ்திரீகளை அழைத்துச் செல்ல வந்தனர் . அப்போது சாருமதி முதலிய ஸ்திரீகளுக்கு சாஸ்திர முறைப்படி இவர்கள் கையால் பூஜை செய்து வைத்து பிராம்மணருக்கு சந்தன , குங்கும அட்சதைகளால் பூஜித்து , ( சுவாமிக்கு நிவேதம் செய்த ) பலகாரங்களையும் , தட்சணை , தாம்பூலம் கொடுத்து , நமஸ்கரித்து , அந்தணரின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர் . வரலக்ஷ்மி தேவிக்கு நிவேதித்த பட்சணங்களை தங்கள் சுற்றத்தாருடன் புசித்து , தங்களை அழைத்துப் போக வந்திருந்த வாகனங்களில் ஏறிக் கொண்டு தங்கள் தங்கள் வீட்டை அடைந்தனர் . எல்லோருடைய இல்லத்திலும் சாருமதி தேவியினால் அல்லவா இப்பாக்கியத்தை நாம் பெற்றோம் என்று எல்லோரும் சாருமதியை மிகவும்  புகழ்ந்து பேசினார்கள் . சாருமதி தேவி கனவில் வரலக்ஷ்மி தேவி தோன்றியது அவள் செய்த பாக்கியம் அல்லவா என்றும் , அதனாலேயே நாம் செல்வங்களை அடைந்தோம் என்றும் மனதார போற்றினார்கள் . அது முதல் சாருமதி முதலிய ஸ்திரீகளெல்லாம் இந்த வரலக்ஷ்மி விரதம் ஒவ்வொரு ஆண்டும் செய்து , புத்திர பௌத்திர விருத்தியாய் சகல சம்பத்துக்களுடன் வாழ்ந்து இருந்தார்கள் . 


ஆகையால் , ஓ பார்வதி இவ்வுத்தம விரதத்தை பிராம்மணர் முதல் நான்கு ஜாதியினரும் செய்யலாம் . அப்படிச் செய்கிறவர்கள் சகல சம்பத்துண்டாகி சுகமாய் இருப்பார்கள் . இக்கதையை கேட்கிறவர்களும் , படிக்கிறவர்களும் விரதம் பூர்த்தி செய்பவர்களும் வரலக்ஷ்மி தேவி கடாக்ஷம் கிடைக்கப் பெற்று சகல காரிய சித்தி அடைந்து பிறகு நற்கதி அடைவார்கள் .


வரலக்ஷ்மி விரத கதை சம்பூர்ணம் 

 

நைவேத்தியங்கள்

 • இட்லி, அப்பம்,  உளுந்து வடை, கொழுக்கட்டை, வெல்லம் பாயசம்

 

 1. மாலையில் அம்மனுக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து, கற்பூரம் ஆரத்தி எடுக்கவும்.
 2. பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும்.
 3. மறு நாள் காலை புனர்பூஜை செய்து, அம்மனை எடுத்து அரிசி பானையில் வைக்கவும்.
 4. அம்மன் வைத்த அரிசியை, வரும் கிருஷ்ண ஜயந்தி பட்சணம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம்.

 

To Book Iyer, Please contact 9498421296

Please write your questions here