ஸ்ரீ வரலட்சுமி விரத விரதம் கலச அலங்காரம்
- முதலில் வீட்டை தோரணங்களால் அலங்கரிக்கவும்
- கலசத்திற்கு உள்ளே [ தங்கம் வெள்ளி சொம்பு ]அவரவர் சம்பிரதாயம் படி அரிசி அல்லது தீர்த்தம் நிரப்பிக் கொள்ளவும்
- பிறகு அதில் எலும்பிச்சை பழம் வெற்றிலை பாக்கு முழு நாணயம் இவைகளை போடவும்
- மாவிலை பொத்தையும் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து சந்தனம் புஷ்பங்களால் அலங்கரித்து அதன்மேல் ஸ்ரீ வரலட்சுமி அம்மன் முகத்தை வைக்கவும்
- அதன் மேல் வஸ்திரம் [ ரவிக்கை துணி] ஆபரணங்கள் அணிவிக்கவும்
- வீட்டின் கிழக்கு பக்கமாக நுனி வாழை இலையை போட்டு நெல்லை பரப்பி பிறகு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி அதன் மேலே கலசத்தை வைத்து பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்வோம்
- கற்பூர ஆரத்தி எடுக்கவும்
- பிறகு உள் நிலைபடியில் இருந்து அம்மனை அழைத்து வரும் பாவனை உடன் கொண்டு வைத்து கலசத்திற்கு முன்னால் ஸ்தோத்திரங்களை கூறி லட்சுமி காவே மாயம் டிவி என்ற கீர்த்தனையை சொல்லி மங்களகரமான பாடல்களைப் பாடி அம்மனில் உள்ளே அழைத்து மண்டபத்தில் அமர்த்தவும்
- குறிப்பு சிலர் வீட்டில் அம்மனை அலங்காரம் செய்த பின் வாசற்படியின் வெளியே அம்மனை வைப்பார் பிறகு அம்மனை வீட்டிற்கு அழைத்து அம்மனுக்கு தயார் செய்த மண்டபத்தில் அம்மனின் கலசத்தை வைப்பார்