காலம் : ஸ்ராவணம் ( ஆடி அல்லது ஆவணி ) மாதம் பௌர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று சுமங்கலிகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வரலக்ஷ்மி பூஜை செய்யவேண்டும்
- ஆசமனம்
- கேசவயஸ் ஸ்வாஹா
- நாராயணாயஸ் ஸ்வாஹா
- மாதவாயஸ் ஸ்வாஹா
- கோவிந்தாய நமஹ
- விநாயகர் பிரார்த்தனை
- சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
- சங்கல்பம்
- மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே|
- பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜை
- பிள்ளையாருக்கு உபசார பூஜை :
- உபசார பூஜை என்றால் பிள்ளையாருக்கு தண்ணீர் தெளித்தல் ( மா இலை உபயோகிக்கவும் ) சந்தனம் தெளித்தல் (புஷ்பம் உபயோகிக்கவும்) குங்குமம் வைத்து அக்ஷதையை பிள்ளையார்மேலே ஸமர்ப்பிக்கவும்
- புஷ்ப அக்ஷதைகளாலே மஞ்சள் பிள்ளையாரை கீழ்கண்ட மந்திரங்களால் புஷ்பத்தைக் கொண்டு அர்ச்;சனை செய்ய வேண்டும்.
- ஓம் ஸூமுகாய நமஹ , ஓம் ஏகதந்தாய நமஹ ஓம் கபிலாய நமஹ........ ஓம் நாநாவித பத்ர பரிமள புஷ்பாணி ஸமர்ப்பியாமி
- ஊதுபத்தி காட்ட வேண்டும்
- வெத்திலை, பாக்கு, வாழைப்பழம்,வெல்லம், தேங்காய் இவைகளை நிவேதனம் செய்ய வேண்டும். மணி அடித்துக் கொண்டே கீழ் வரும் நிவேதன மந்த்ரங்களைச் சொல்ல வேண்டும்.
- கற்பூரம் காட்டவும்
- வக்ர துண்ட மஹாகாய கோடி சூர்ய சமப்ரப நிர்விக்ணம் குருமே தேவ சர்வகார்யேஷுசர்வதா| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
- கலசத்திற்கு உபசார பூஜை
- உபசார பூஜை என்றால் கலசத்திற்கு தண்ணீர் தெளித்தல் ( மா இலை உபயோகிக்கவும் ) சந்தனம் தெளித்தல் (புஷ்பம் உபயோகிக்கவும்) குங்குமம் வைத்து அக்ஷதையை பிள்ளையார்மேலே ஸமர்ப்பிக்கவும்
- லட்சுமி அஷ்டோத்திரம்
- தோரக்ரிந்திம் பூஜை
- வரலட்சுமி நோன்பு கதை
- பிள்ளையாருக்கு உபசார பூஜை :
கதை சொல்பவரும் கேட்பவரும் பூ அட்சதை கையில் வைத்துக் கொள்ளவும்.
நைமிசாரண்ய க்ஷேத்திரத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் . சௌனகாதி மஹாரிஷிகளைப் பார்த்து , குதமஹா முனிவர் சொல்லுகிறார் . ஓ முனி சிரேஷ்டர்களே ! ஸ்திரீகளுக்கு சர்வ சௌபாக்கியத்தைக் கொடுக்கும்படியான உத்தம விரதம் ஒன்றுண்டு . அதை பரமேஸ்வரன் பார்வதிக்கு சொன்னார் . நான் உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள் " என்று கூறினார் . கைலாச பர்வதத்தில் வஜ்ஜிர . வைடுர்யமான மணி கணங்களால் இழைக்கப்பட்ட சிங்காசனத்தில் வீற்றிருந்த பரமேஸ்வரனை பார்வதி தேவிநமஸ்கரித்து.
" ஓதேவா ! ஸ்திரீகள் எந்த விரதத்தை செய்தால் , எப்படி செய்தால் புத்திர , பௌத்திராதி , சகல சம்பத்துண்டாகி , சுகம் அடைவார்களோ , அந்த விரதத்தைக் கூறுங்கள்" என்று கேட்டார் .
அதற்கு பரமேஸ்வரன் " ஓ பார்வதியே ! வரலஷ்மி விரதம்" என்று ஒரு விரதமுண்டு , அந்த விரதம் ஆவணி மாதம் பூர்வபக்ஷம் அல்லது சுக்கில பக்ஷம் பருவத்திற்கு முன்ளே வரும் வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும் . ' என்றார் .
ஓ காத்யாயினி ! இந்த வரலஷ்மி விரதத்தை விபரமாய் சொல்கின்றேன் . கேள் என்றார் . மகத தேசத்தில் குண்டினபுரமென்று ஓர் பட்டமுண்டு அப்பட்டணமானது பொன்மயமான கோபுரங்களாலும் , மெத்தை மேடையனாலும் , மதில்களாலும் மின் அலங்காரமாய் இருந்தது . அப்பட்டணத்தில் சாருமதி என்னும் பெயர் கொண்ட ஒரு பிராமண ஸ்திரீ இருந்தாள் . அப்பெண்மணி மிகபதிவிரதை.கணவனையே தெய்வமாக நினைத்து , உதய காலத்தில் எழுந்து கணவனையே நமஸ்கரித்து பாதம் பணிந்து , பிரதட்சணம் செய்து , பின் கடவுளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து மாமனார் மாமியாருக்குத் தகுந்த பணிவிடைகள் செய்து விட்டு , வீட்டு வேலைகள் செய்யத்துவங்குவாள் . பெரியோர்களிடத்தில் பக்தியுடனும் , பணிவுடனும் நடந்து கொள்வாள் . இப்படி கற்புடன் இருந்த சாருமதி மேல் மகாலக்ஷ்மிக்கு மிக கருணை உண்டாகி , ஒரு நாள் இரவு சாருமதியின் கனவில் வரலக்ஷ்மி தோன்றி - சாருமதி ! உன்னிடத்தில் எனக்கு கிருபை உண்டாகி உனக்கு அனுக்ரஹிக்க பிரத்யக்ஷமானேன் . ஆவணிமாதம் பூர்வ பக்ஷம் பருவத்திற்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் என்னை பூஜித்தால் உன் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்கிறேன் என்று சொல்ல உடனே சாருமதி தன் கனவிலேயே லக்ஷ்மி தேவியை வலம் வந்து நமஸ்கரித்து அபான ஸ்தோத்திரம் செய்தாள் .
சுலோகம் :
நமஸ்தே சர்வலோகநாம் ஜனன்யை புண்ணிய மூர்த்தியே சரண்யே த்ரிஜகத்வந்தியே விஷ்ணு வக்ஷஸ்தாலேயே!
என்று அநேக விதமாய் ஸ்தோத்திரம் செய்து , உங்களுடைய கடாக்ஷத்தினால் மக்களுக்கு சகல சம்பத்துக்களும் வித்தைகளும் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை. என்னுடைய பூர்வ புண்ணியத்தால் உங்களுடைய தரிசனம் கிடைக்கப் பெற்றேன் . என்று மிக சந்தோஷத்துடன் சாருமதி கூறினாள் . மஹாலஷ்மி மிகவும் சந்தோஷமுண்டாகி சாருமதி உடனே கண்விழித்து வீட்டின் நான்கு புறமும் சுற்றி பார்த்து வரலக்ஷ்மி தேவியைக் காணாமல் "ஓஹோ , நான் கனவு கண்டேன் " என்று அறிந்து , பார்த்த சொப்பனத்தை கணவர் , மாமி , மாமனார் மற்றும் எல்லோரிடமும் சொன்னாள் . இந்த கனவு மிக உத்தமமானது என்று சொல்லி ஆவணி மாதம் வந்தவுடன் மஹாலஷ்மி சொன்ன நாளில் சாருமதி வீட்டில் எல்லோரும் வீட்டை மெழுகி சுத்தப்படுத்தி காலையில் இருந்து மாலை வரை ஓர் ஆசனம் போட்டு , அவ்விடத்தில் கோலங்கள் இட்டு , ஒர் தேங்காயுடன் கலசம் அலங்கரித்து , வரலக்ஷ்மி தேவியை அந்த கலசத்தில் ஆவாஹனம் செய்து , பக்தியுடனும் பணிவுடனும் சாயங்காலத்தில் எல்லா ஸ்திரீகளும் அந்த வரலஷ்மி தேவியை தியானித்துச்சொல்லுகிறார்கள் .
என்று கூறி மற்றும் ஷோடசோபசார பூஜைகள் செய்து , ஒன்பது இழைகளும் முடிகளும் உள்ள நோன்பு கயிறு என்னும் தோரத்தை வலது கையில் கட்டிக் கொண்டு , வரலக்ஷ்மி தேவிக்கு பலவிதமான பலகார தினுசுகள் நிவேதனம் செய்து , கற்பூர தீபராதனை செய்து ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தார்கள் .
ஒரு தரம் வலம் சுற்றி வந்தவுடனே அந்த ஸ்திரீகளுடைய கால்களில் கல்கல்லென்று ஓசை உண்டாகியது . எல்லோரும் தங்கள் கால்களைப் பார்த்துக் கொள்ள கெஜ்ஜை முதலிய ஆபரணங்கள் உண்டாயிருக்கக்கண்டு சந்தோஷம் அடைந்தார்கள் .
இரண்டாவது பிரதக்ஷிணம் செய்ய அவருடைய கைகளில் தளதள வென்று பிரகாசிக்கும் படியான நவரத்தின வளையல்கள் , கங்கணம் மற்றும் ஆபரணங்கள் ஜொலித்தன .
மூன்றாவது பிரதக்ஷிணம் செய்ய , அந்த ஸ்திரீகளுடைய சரீரம் முழுவதும் ஆபரணங்களால் நிறைந்தது . அவர்கள் வீடுகளில் எல்லாம் செல்வம் கொழித்து , ரத , கஜ . துரக , பதாதி , வாகனங்களுடன் அந்த ஸ்திரீகளை அழைத்துச் செல்ல வந்தனர் . அப்போது சாருமதி முதலிய ஸ்திரீகளுக்கு சாஸ்திர முறைப்படி இவர்கள் கையால் பூஜை செய்து வைத்து பிராம்மணருக்கு சந்தன , குங்கும அட்சதைகளால் பூஜித்து , ( சுவாமிக்கு நிவேதம் செய்த ) பலகாரங்களையும் , தட்சணை , தாம்பூலம் கொடுத்து , நமஸ்கரித்து , அந்தணரின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர் . வரலக்ஷ்மி தேவிக்கு நிவேதித்த பட்சணங்களை தங்கள் சுற்றத்தாருடன் புசித்து , தங்களை அழைத்துப் போக வந்திருந்த வாகனங்களில் ஏறிக் கொண்டு தங்கள் தங்கள் வீட்டை அடைந்தனர் . எல்லோருடைய இல்லத்திலும் சாருமதி தேவியினால் அல்லவா இப்பாக்கியத்தை நாம் பெற்றோம் என்று எல்லோரும் சாருமதியை மிகவும் புகழ்ந்து பேசினார்கள் . சாருமதி தேவி கனவில் வரலக்ஷ்மி தேவி தோன்றியது அவள் செய்த பாக்கியம் அல்லவா என்றும் , அதனாலேயே நாம் செல்வங்களை அடைந்தோம் என்றும் மனதார போற்றினார்கள் . அது முதல் சாருமதி முதலிய ஸ்திரீகளெல்லாம் இந்த வரலக்ஷ்மி விரதம் ஒவ்வொரு ஆண்டும் செய்து , புத்திர பௌத்திர விருத்தியாய் சகல சம்பத்துக்களுடன் வாழ்ந்து இருந்தார்கள் .
ஆகையால் , ஓ பார்வதி இவ்வுத்தம விரதத்தை பிராம்மணர் முதல் நான்கு ஜாதியினரும் செய்யலாம் . அப்படிச் செய்கிறவர்கள் சகல சம்பத்துண்டாகி சுகமாய் இருப்பார்கள் . இக்கதையை கேட்கிறவர்களும் , படிக்கிறவர்களும் விரதம் பூர்த்தி செய்பவர்களும் வரலக்ஷ்மி தேவி கடாக்ஷம் கிடைக்கப் பெற்று சகல காரிய சித்தி அடைந்து பிறகு நற்கதி அடைவார்கள் .
வரலக்ஷ்மி விரத கதை சம்பூர்ணம்
நைவேத்தியங்கள்
- இட்லி, அப்பம், உளுந்து வடை, கொழுக்கட்டை, வெல்லம் பாயசம்
- மாலையில் அம்மனுக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து, கற்பூரம் ஆரத்தி எடுக்கவும்.
- பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும்.
- மறு நாள் காலை புனர்பூஜை செய்து, அம்மனை எடுத்து அரிசி பானையில் வைக்கவும்.
- அம்மன் வைத்த அரிசியை, வரும் கிருஷ்ண ஜயந்தி பட்சணம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம்.
To Book Iyer, Please contact 9498421296
Please write your questions here